Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தேவை அதிகரிப்பால் உயர்ந்த தாமிரம் விலை - வெள்ளி, அலுமினியம் விலை குறைவு

தேவை அதிகரிப்பால் உயர்ந்த தாமிரம் விலை - வெள்ளி, அலுமினியம் விலை குறைவு

எம்சிஎக்ஸ் சந்தையில், அக்டோபர் மாதம் வழங்குவதற்கான தாமிரத்தின் முன்பேர விலை ஒரு கட்டத்தில் கிலோவுக்கு ரூ.4.70 உயர்ந்து ரூ.1,424.15 ஆனது.

பகிரவும் WhatsApp Facebook

தேவை அதிகரித்ததால் முன்பேர வர்த்தகத்தில் தாமிரம், துத்தநாகம் விலைகள் உயர்ந்தன. வெள்ளி, அலுமினியம் விலைகள் குறைந்தன.

எம்சிஎக்ஸ் சந்தையில், அக்டோபர் மாதம் வழங்குவதற்கான தாமிரத்தின் முன்பேர விலை ஒரு கட்டத்தில் கிலோவுக்கு ரூ.4.70 உயர்ந்து ரூ.1,424.15 ஆனது. இது 0.33 சதவீத உயர்வாகும். மொத்தம் 3,925 லாட்டுகள் வர்த்தகமாகின. சந்தையில் தேவை அதிகரித்ததும், வர்த்தகர்கள் அதிகளவில் வாங்கியதும் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அக்டோபர் மாதம் வழங்குவதற்கான துத்தநாகத்தின் விலை கிலோவுக்கு 75 பைசா உயர்ந்து ரூ.420.35 ஆனது. இது 0.18 சதவீத உயர்வாகும். இதில் 1,558 லாட்டுகள் வர்த்தகமாகின. சந்தையில் துத்தநாகத்துக்கான தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் கூறினர்.
அலுமினியம் விலை சற்று குறைந்தது. அக்டோபர் மாதம் வழங்குவதற்கான அலுமினியத்தின் விலை கிலோவுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.338.55 ஆனது. இது 0.32 சதவீத சரிவாகும். மொத்தம் 493 லாட்டுகள் வர்த்தகமாகின. அலுமினியத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் தேவை குறைந்ததும், வர்த்தகர்கள் வாங்குவதைக் குறைத்ததும் விலை சரிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
டிசம்பர் மாதம் வழங்குவதற்கான வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,361 குறைந்து ரூ.2,21,200 ஆனது. இது 1.06 சதவீத சரிவாகும். இதில் 3,097 லாட்டுகள் வர்த்தகமாகின. வர்த்தகர்கள் வெள்ளி ஒப்பந்தங்களை விற்றதால் விலை குறைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை சரிந்தது. நியூயார்க்கில் ஓர் அவுன்ஸ் வெள்ளி 59.16 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது. இது 1.03 சதவீத சரிவாகும்.

முந்தைய செய்தி
வேதாந்தா பங்குக்கு ரூ.5 டிவிடெண்ட் - எந்த தேதியில் பதிவு செய்யலாம்?
அடுத்த செய்தி
காசா கிராண்ட் பிரீமியம் குடியிருப்பு அறிமுகம் - எங்கு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்